மாவட்ட செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம்.

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் – உயர்நீதிமன்றம் முன்பு கோவணம் கட்டிக்கொண்டு பட்டை, கொட்டையுடன் தவமிருக்க முடிவு – அய்யாகண்ணு பரபரப்பு பேட்டி
கொரோனா கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்ற பிறகு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு வேகமாக சென்று விவசாயிகளின் பிரச்சினைகள், மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதுடன் அலட்சியம் காட்டுவதாக கூறினார். அதை தொடர்ந்து ஆற்று, ஏரி பாசன விவசாய சங்க தலைவர் விசுவநாதன் பேசும்போது தன் கையில் கொண்டு வந்திருந்த சீமை கருவேல் செடியை ஆட்சியருக்கு முன்பாக ஏந்தி ஏரி, குளங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற முதல்வர் அறிவித்த பின்னும் இதுவரை நடக்கவில்லை, விவசாயிகள் மனுக்கள் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், கூட்டுறவு சங்கத்தில் நிறைய முறைகேடுகள் நடக்கிறது. விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கிறார்கள்.
கடன் கேட்டால் கூட்டுறவு சங்க செயலாளர் கொடுக்க மறுக்கிறார்.
இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாய சங்க தலைவர் சின்னதுரை பேசுகையில், ஏரி, குளங்களை மண் கொண்டு மேவி சாலைகளாக மாற்றுகின்றனர் .இது எந்த விதத்தில் நியாயம், இதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போகக்கூடாது. நீர்வளம் குறைந்து போகும். ஒருபுறம் மேகதாது அணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இங்கு ஏரிகளை மண்கொண்டு மூடுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுக்கு லாபகரமான விலை ஒரு பொருளுக்கும் கொடுக்கவில்லை. 18 ரூபாய் விற்ற நெல்லுக்கு 54 ரூபாய் கொடுப்பதாக மத்திய அரசு தெரிவித்தது 2 ரூபாய் எடுத்துக் கொடுத்தது அதுவும் 2 ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொள்கிறார்கள், லஞ்சம் வாங்காமல் கொடுக்கச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்கேலா பைனான்ஸ்படி சொசைடியில் எங்களுக்கு கடன் தர வேண்டும் கவரைக் கொடுத்தார்
32ஆயிரம் நெல்லுக்கு தருகிறார்கள், கவர் இல்லை என்றால் 10,000 ரூபாய், கரும்புக்கும், வாழைக்கும் 60ஆயிரம் தர வேண்டும் அவர் கொடுத்தால் 60 ஆயிரம் கவர் இல்லை என்றால் 20ஆயிரம் தருகிறார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர் கடமை என தெரிவித்தார். மேலும், இவற்றையெல்லாம் கண்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகளே உயர்நீதிமன்றம் நீதிபதிகளே எங்களுக்கு காப்பாற்றுங்கள் என்று சொல்லி உயர் நீதிமன்றம் முன்பு படுத்துக் கொள்ளப் போகிறோம். சட்டையை கழட்டிவிட்டு கோவணத்தை கட்டிக்கொண்டு பட்டை, கொட்டையுடன் படுத்துக்கொண்டு உண்ணாவிரதத்திற்கு போகிறோம் என தெரிவித்தார்.
