BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி கிடைக்காத பயனாளிகள் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி கிடைக்காத பயனாளிகள் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது இச்சங்கத்தில்
900 மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை அடமானம் வைத்து உள்ளனர்.
தமிழக அரசு ஐந்து சவரனுக்கும் குறைவாக நகை கடன் பெற்றவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 343 பேருக்கு நகை கடன் தள்ளுபடிகான பயனாளிகள் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.


இதனை அறிந்து அங்கு கிராம மக்கள் தாங்கள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனவா என்று பார்த்தபோது பலரது நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி கிராம மக்கள் நேற்று கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சரக துணை பதிவாளர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை இந்நிலையில் இன்று மறு ஆய்வு செய்யப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர் இந்நிலையில் இன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அடைக்கப்பட்டிருந்த ஏமாற்றமடைந்த அக்கிராம மக்கள் வில்லிசேரி அருகே உள்ள மதுரை நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர் இதனால் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது பின்னர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர் சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )