BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டம் பாலக்கரையை சேர்ந்தவர் தர்மராஜ்(27).  மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகள்.

திருச்சி மாவட்டம் பாலக்கரையை சேர்ந்தவர் தர்மராஜ்(27). இவர் மீது தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. தற்போது புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கீழவாசல் பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக நேற்று காவல்துறையினர் புதுக்கோட்டையில் இருந்து அழைத்து வந்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டு சிறைக்கு அழைத்து செல்லும் போது இரண்டு காவலர்களை தள்ளிவிட்டு தப்பி சென்றுவிட்டார். தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )