BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது 650 காளைகள் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் திருக்கானூர் பட்டி நாஞ்சிக்கோட்டை கிராமங்களில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடை பெற்ற நிலையில் இன்று ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது கூடுதல் ஆட்சியர் சுபபுத்ரா தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இதில் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருச்சி திருவாரூர் அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து650 காளைகள் பங்கேற்றுள்ளன இதேபோல் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர் வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர்.

மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பீரோ கட்டில் உண்டா ஷேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி தஞ்சை ராமநாதபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )