மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் திமுக தலைமையில் நடைபெறும் கடந்த 8 மாத ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது
தமிழகத்தில் காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது
கடந்த அதிமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டது ஆம்பூரில் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய சிறுபான்மை துறை செயலாளர் வேலூர் இப்ராஹிம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இப்ராஹிம் வேலூரில் நடைபெற்ற சம்பவம் காவல் துறையினருக்கு மிகப்பெரிய அவமானம்., பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. வேலூரில் நேற்று பிரச்சாரத்தின் போது வன்முறையாளர்கள் கற்களையும், கட்டைகளையும் வீசி தாக்குதல் நடத்தினர் எங்களை காப்பாற்ற எங்களுடன் சேர்ந்து காவல் துறையும் அடி வாங்குகிறாகள். எங்களை இழுத்துகொண்டு ஓடுகிறார்கள்., உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடகூடிய ஒரு மோசமான நிலை இந்த திமுக ஆட்சியில் மட்டும் நடக்கிறது என்றால் இவர்கள் வாக்கு வங்கி என்ற பெயரில் இந்த நாட்டை சுடுகாடாக மாற்ற நாசமாக்க திமுக வழிவகுக்கிறது என்பதை அனைத்து சமுதாய மக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.
பாஜக நட்சத்திர பேச்சாளர்களும் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட செல்லும் போது கூட எங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர முடியாமல் முன்னெச்சரிக்கையாக எங்களை கைது செய்வதும் வன்முறையாளர்களை பாதுகாப்பதும் திமுகவின் ஓட்டு வங்கிக்காக பாஜக தலைவர்களை நெருக்கடி செய்யும் சம்பவங்கள் இன்று தொடர்கதையாகி வருகிறது. பிரச்சாரம் செய்யவே முடியவில்லை.
நாங்கள் எங்கே , எந்த இடத்தில், யாரிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதை கூட காவல் துறையினர் முடிவு செய்கின்றனர். இது காட்டு மிராண்டிதனமான ஒரு திமுகவின் உடைய ஆட்சி காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகிறார்கள்., கடந்த அதிமுக ஆட்சியில் காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட்டார்கள். இன்றைக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் காவல் துறையினர் சிக்கி தவிக்கிறார்கள் அவர்கள் நேர்மையாக செயல்பட முயற்சி செய்தால் கூட முடியாமல் போகிறது என்ற வருத்தம் காவல் துறையினருக்கே இருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன் என்று பேசினார்.