மாவட்ட செய்திகள்
தஞ்சையில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி.

தஞ்சையில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி.
தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் பங்கேற்பு.

தஞ்சை மறைமாவட்ட மீட்பு பணி மையம் ஆயர் சுந்தரம் வளாகத்தில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முனைவர் சுகுமாரன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எழுத்தாளர் தஞ்சை ராமநாதன், உதவி பேராசிரியர் சக்திவேல், திரு உருவை பேரவை செயலாளர் சாஜுதீன், வழக்கறிஞரும், தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர் மான கண்ணுக்கினியாள், இந்திய ஆட்சிப் பணிகள் ஓய்வு அன்புச்செல்வன், தஞ்சை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் சுந்தரம், வேந்தர் தஞ்சை மாவட்டம் ஜான் சாக்கிரியாஸ், பிஷப் பள்ளி நிர்வாகி ஜார்ஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜேம்ஸ், ஆகியோர் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம் குறித்து பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் சமூகம் நல்லிணக்கம் நாள் தமிழ் வாழ்வில் ஒரு ஆதார பண்பாட்டுக் கூறான சமூக நல்லிணக்கத்தின் தற்கால அத்தியாவசியத்தை வலியுறுத்தவும் தமிழகத்தின் ஒருங்கிணைந்த மேம்பாட்டில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பை பதிவு செய்யவும் தஞ்சை மறைமாவட்டம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் நடைபெற்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
