BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி மக்கள் அதிகாரம் முதல் மாநில மாநாடு.

மக்கள் அதிகாரம் முதல் மாநில மாநாடு – காவி அதிகார மையமாகும் கோயில்களில் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சி தில்லை நகரில் மக்கள் அதிகாரம் சார்பில் முதல் மாநில மாநாடு மாநில பொருளாளர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், பாலன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில் கோவில் நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஆன்மீகத்தை அரசியலாக்கி பக்தியை இந்து மத வெறியாக மாற்றுவதுடன் காவி பாசிச சக்திகளின் கூடாரமாக கோயில் மாற்றுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், நீதித்துறையும் காவி பாசிச சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி வருகிறது என்பதை எச்சரிக்கையுடன் இதற்கு எதிராக போராட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.


தொடர்ந்து மாநாட்டில் தனியார்மயம் தாராளமயம் என கொண்டு செல்லும் மத்திய அரசை கண்டிப்பது, கார்ப்பரேட் கொள்ளைக்கு பொருளாதார சீர்குலைவு துணைபோவது, உரிமைக்காகப் போராடும் அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், உள்ளிட்டோர் மீது அர்பன் நக்சல் என தீவிரவாத முத்திரை குத்தி ஊபா, NiA போன்ற கொடூர சட்டங்களில் விசாரணையின்றி சிறையில் அடைப்பது நிறுத்தப்பட வேண்டும், லவ் ஜிகாத், மதமாற்றம், ஹிஜாப் தடை, மாட்டுக்கறி என பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்களை இஸ்லாமிய, கிறிஸ்தவ, தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதை காவி பாசிச கூட்டம் நிறுத்த வேண்டும் கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை குறித்து மக்கள் அதிகாரம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜு உரை நிகழ்த்தினார். இம்மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )