BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நீலகிரி குன்னூரில் வனத்துறை சார்பில் மஞ்சப்பை மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்து மினி மார்த்தான் வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் மஞ்சப்பை மற்றும் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம்
குன்னூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்று இதில் முன்று பிரிவுகளாக 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 8 கிலோ மீட்டர் ஒட்டப்பந்தயங்கள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்ட்டது. வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசுகையில் 2022 _2023 மார்ச் மாத்திக்குள் இரண்டரை லட்சம் மரக்கன்றுகள் நட உள்ளதாகவும் மேலும் ஆண்டுத் தோறும் 32 கோடி மரக்கன்றுகள் நட உள்ளதாகவும் இதில் பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, அறநிலைத்துறை அனைத்து துறையினரும் இணைந்து தமிழக முமுவதும் மரக்கன்றுகள் நட கிரின் லேபர்டி கம்பெனி என நிறுவனத்தை உருவாக்கி அதன் முலம் அனைத்து மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நட உள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் ஒட்ட பந்தயத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சார்_ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, குன்னுார் காவல் துறை துனைக்கண் கானிப்பாளர் சுரேஷ், குன்னுார் நகர மன்ற தலைவர் ஷிலா கேத்தரின், ராணுவ கமான்டர் அனில், வருவாய்த்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )