மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டக் கலைக்கு தமிழக அரசால் கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டக் கலைக்கு தமிழக அரசால் கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது, வேலை வாய்ப்பில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்து அறிவித்ததால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிலம்பக்கலையை கற்றுத்தர ஆர்வம் காட்டுவதாக சிலம்பக்கலை ஆசான்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

திரு. ராஜேஸ்கண்ணா- சிலம்பக்கலை மாஸ்டர்
செல்வி. சங்கீதா – சிலம்பக்கலை – மாஸ்டர்
கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் சிலம்பக் கலை அழியாமல் தொடர்ந்து பயிற்சியும், போட்டிகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு சிலம்பக் கழகம் சார்பில் தஞ்சையில் மாணவர்களுக்கான சிலம்பப் போட்டி இன்று நடைபெற்றன. 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிலம்பத்தை சுத்தி தங்களது திறனை வெளிப்படுத்தினர்.

இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடுபவர்கள் மாநில அளவிலான அணியில் இடம்பெறுவர் என்றும் தமிழக அரசு வேலைவாய்ப்புக்காக 3 சதவிகித இட ஒதுக்கீடு அறிவித்ததையடுத்து முன்பை விட தற்போது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சிலம்பம் பயிற்சியில் சேர்த்துவிடுவதோடு இல்லாமல் பெற்றோர்களும் ஆர்வத்துடன் சிலம்பப் போட்டிக்கு வந்துந்துள்ளதாக சிலம்ப ஆசான்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் நடப்பாண்டு முதல் 6 மாத கோர்ஸாக 8 வகையான சிலம்பப் படிப்பு, பயிற்சியுடன் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
