BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை மற்றும் மாசி பங்குனி சித்திரை மாதங்களில் அதிக வெயில் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவது வழக்கம் இந்நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வெயில் தாக்கம் அதிக அளவு உள்ள நிலையில் தற்போது வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கோடை வாசஸ்தலங்களுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது தற்போது இதமான குளிர் காற்றும் சாரல் மழையும் வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் குதூகலமாக சுற்றுலா தளங்களை பார்வையிட்டு இதமான சூழ்நிலை அனுபவித்து வருகின்றனர் மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வருவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளதால் சுற்றுலா தளங்களை நம்பியுள்ள வியாபாரிகள் மற்றும் கொடைக்கானல் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )