மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மாவட்ட பொறுப்பாளர், மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரிலே மற்றும் பேரூராட்சி இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் மடத்துக்குளம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினராக இரா. ஜெயராமகிருஷ்ணன் பங்கேற்று இளைஞர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே ஈஸ்வரசாமி, நகராட்சி ஊராட்சி மன்ற தலைவர் பிஎஸ் தங்கராஜ், மற்றும் மாவட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
