மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சிக்கான நிதி நிலை அறிக்கையில் ரூ.37.36 கோடி பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி பட்ஜெட் ரூ.37.36 கோடி பற்றாக்குறையுடன் சுமார் 5 ஆண்டு கால இடைவெளிக்கு பின் தாக்கல் செய்யப்படவுள்ள
திண்டுக்கல் மாநகராட்சிக்கான நிதி நிலை அறிக்கையில் ரூ.37.36 கோடி பற்றாக்குறை சுட்டிக்காட்டப்பட்டிருப்பது மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் கூறியதாவது:
கடந்த 2015-16 நிதி நிலை அறிக்கையில் ரூ.10.38 கோடிக்கு நிகர பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டுக்கான (2016-17) நிதி நிலை அறிக்கையில் ரூ.4.52 கோடியாக குறைக்கப்பட்டது. 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் ரூ.37 கோடி பற்றாக்குறை இருப்பதாக சுட்டிக்காட்டியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
