மாவட்ட செய்திகள்
ஸ்ரீ மகாவீர் சமூக நல சங்கத்தின் ஜெயின் மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் மையம் துவக்கம்.
கோவை மார்ச்,27:கோவை ஸ்ரீ மகாவீர் சமூக நல சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் சாலை, திருவேங்கடம் சாலையில் ஜெயின் மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் மையம் துவக்க விழா நடைபெற்றது.
டயாலிசிஸ் மருத்துவ மைய துவக்க விழாவில் , ஹைதராபாத்பகவான் மகாவீர் ஜெயின் நிவாரண அறக்கட்டளை தலைவர்ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிசி பராக் ,ஜெகோவை சாந்திநிகேதன் சில்க்ஸ்ஜெயந்தி லால்பாஃப்னா, திருப்பூர் பைரவ் நிட்டிங் பிரைவேட் லிமிடெட் ஸ்ரீமதி மீனா மஹிழ்ஜி மேத்தா /கோவை கங்கா மருத்துவமனை டாக்டர் ராஜசேகரன், கேஜி மருத்துவமனை மூத்த இருதயநோய் நிபுணர் ராவ், இந்திய வர்த்தக சபை தலைவர் பாலசுப்பிரமணியம்/ மைசூர் பகவான் மகாவீர் ஜெயின் டயாலிசிஸ் மையம் தலைவர் காந்திலால் செ ளகான், பு௹க்பீல்ட்ஸ் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஜெயின் மருத்துவம் மற்றும் டயலிசிஸ் மையத்தினை துவக்கி வைத்தார்கள்.
இம்மையம் குறித்து இந்த மையத்தில்தலைவர் மற்றும் செயலாளர் கிரன் மேத்தா, தேஜ்பால் ரத்தோட், திரு.தினேஷ் மேத்தா, மகேஷ் கன்காரியா கூறுகையில்,
2012ஆம் ஆண்டு 20 ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்கள் குழு இரண்டு இயந்திரங்களுடன் கோவையில் முதல் டயாலிசிஸ்மையத்தை தொடங்கியபோது, டயாலிசிஸ்தேவைப்படும் நோயாளிகளுக்கு புதிய தொடக்கமும் நம்பிக்கையின் நிம்மதியும் கிடைத்தது. இப்பொழுது 50 பேர் கொண்ட குழுவாக உள்ளது.இம்மையத்திற்கு அறக்கட்டளையில் இருந்து நிதி வருவதால் எங்கள் உண்மையான செலவான ரூ. 1100 ஒரு பகுதியாக டயாலிசிஸ் ஒன்றிற்கு பதிவு கட்டணமாக ரூ 300 என்ற சிறிய தொகை மட்டுமே வசூலிக்கிறோம்.
இது ஒரு கட்டணமில்லா மருத்துவ சேவை ஆகும். இதன் மூலம் நோயாளிகள் மாதம் ஒன்றுக்கு 2000 முதல் 3000 வரை செலவலிக்கிறார்கள். சராசரியாக ஒரு நோயாளிக்கு வழக்கமாக வாரத்திற்கு இரண்டுடயாலிசிஸ் தேவைப்படுகிறது. இது ஒவ்வொன்றும் சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். ஜாதி மதம் வேறுபாடின்றி ஏழை மக்களுக்கு இது வரவேற்கத்தக்க நிவாரணமாகும். நன்கொடைகள் மூலம் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளை சார்ந்த நலம் விரும்பிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஆதரவுடன் நாங்கள் இப்போது சுமார் 30 ஆயிரம் டாலர்களை முடித்துள்ளோம் இது எங்கள் பயனாளிகளுக்கு ரூ 4 கோடி சேமிப்பை உறுதி செய்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் உபகரணங்கள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 7000 ஆக உயர்ந்துள்ளதால் 18 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் மையத்தை அமைத்து ஒரு வருடத்திற்கு 10000 டயாலிசிஸ் செய்து வருகிறோம். இடம் மற்றும் இயந்திரங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமானது.
மானிய அடிப்படையில் ஏழை நோயாளிகளுக்கு இலவச வழங்குவதே ஒரே நோக்கம்..இந்த புதிய திட்டமானது /சிறந்த உபகரணங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிறப்பு மருத்துவரின் ஆலோசனைகளுடன் மேம்பபட்ட முழுமையான நோயறிதல் மையம் ,மருந்தகம் ,மருத்துவ முகாம் மண்டபம் ,மற்றும் பல் பராமரிப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஹெபடைடிஸ் பி மற்றும சிநோயாளிகளுக்கு பிரத்தியேகமாக 4 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் வார்டு இந்த வரிசையில் இருக்கும். மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரம் டாலர்களை முற்றிலும் இலவசமாக முடிக்க நாங்கள் முன்மொழிந்து உள்ளோம். முதல் முறையாக கோவையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் என்ஜிஓ க்களின் குழுவினர் பகுதியாகும்
.இந்தியாவில் சுமார் இருபத்தி மூணு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாதத்திற்கு 6 கோடி மதிப்பிலான 60 ஆயிரம் டயாலிசிஸ் செய்து நோயாளிகளை காப்பாற்றி வருகிறது இந்த சேவைகள் அனைத்தையும் தர்மம் செய்ய வேண்டும் என்பதுதான் முழுஎண்ணம் .இதில் எந்த வணிக லாபம் இல்லை. நீங்கள் செய்யும் உதவி பாக்கியம் இருப்பதால் உங்கள் பங்களிப்பால் மட்டுமே சாத்தியம் என்று நாங்கள் மனப்பூர்வமாக உணருகிறோம் என்று கூறினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.