மாவட்ட செய்திகள்
தஞ்சையில் குடும்பத்தகராறில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.
தஞ்சையில் குடும்பத்தகராறில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை டபீர்குளம் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவரின் மகன் பாலாஜி (39). இவரது மனைவி திவ்யா (30). குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் சோகத்துடன் பாலாஜி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த பாலாஜி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாலாஜியின் மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.