மாவட்ட செய்திகள்
பல்லடம் மாகலட்சுமிநகரில் மருந்து மற்றும் ஜவுளி வியாபாரம் செய்வது போல் ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது.
பல்லடம் மாகலட்சுமிநகரில் மருந்து மற்றும் ஜவுளி வியாபாரம் செய்வது போல் ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது-இரண்டு செல்போன்கள் ரூ.4300 பறிமுதல்! பல்லடம் போலீசார் அதிரடி நடவடிக்கை!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் மருந்து கடை மற்றும் ஜவுளிக்கடைகள் ஆகியவற்றில் மெடிக்கல் செந்தில் ராஜா 38, ஜவுளி சுந்தரேசன் 32 ஆகிய இருவரும் மறைமுகமாக ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு செந்தில் ராஜா என்பவர் தனது மருந்து கடையிலும் சுந்தரேசன் அவர் தனது ஜவுளி கடையிலும் மருந்து மற்றும் ஜவுளி துணிகளை வாங்க வருவது போல் லாட்டரி சீட்டு வாடிக்கையாளர்களை தங்களது கடைக்கு வரவழைத்து செல்போன்களில் வாட்ஸ்அப் குழுக்களை ஏற்படுத்தி ஏழை எளிய நடுத்தர பனியன் தொழிலாளர்களை ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் அடிமையாக்கி தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பல்லடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் மற்றும் போலீசார் இன்று மாலை மகாலட்சுமி நகரிலுள்ள மெடிக்கல் மற்றும் ஜவுளிக்கடையில் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த மெடிக்கல் செந்தில் ராஜா மற்றும் ஜவுளி சுந்தரேசன் ஆகிய இருவரிடமிருந்தும் 2 செல்போன்கள் மற்றும் ரூ 4300 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் அவர்கள் இருவரையும் பல்லடம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில் மெடிக்கல் செந்தில் ராஜா மற்றும் ஜவுளி சுந்தரேசன் ஆகிய இருவரும் பல வருடங்களாக போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடத்திவந்ததாகவும் இதில் சம்பாதித்த பணத்தை கொண்டு வட்டிக்கு விட்டும் சிட் பண்டு நடத்தியும் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்தும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.