BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே  செல்போன் பணம் பறிக்க திட்டம் தீட்டியதாக  ஆயுதங்களுடன்  4  இளைஞர்கள் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஆகிப் உபேத்(20) பட்டதாரி வாலிபர் இவர் தனது நண்பரை  பார்க்கச் ஊசி தோப்பு பகுதிக்கு இருசக்கரவாகனத்தில்சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்ற போது மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தில்  வைத்திருந்த  செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.


இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய  போலீசில் புகார் அளித்துள்ளர்.

புகாரின்பேரில் விசாரணை செய்த போலீசார்,  ஊசி தோப்பு பகுதியில் ரோந்துபணியில் செல்லும் போது சந்தேகத்திற்கிடமாக ஒரு பகுதியில் அமர்ந்திருந்த நான்கு இளைஞர்களை   பிடித்து போலிசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெருமாள்பேட்டை,நேதாஜிநகர்,இந்திரா நகர்,உமர் நகர்  ஆகிய பகுதிகளை  தேவமூர்த்தி( வயது 20),  சுதாகர் (வயது 20),  லோகேஷ்வர் ராவ் (வயது 23),  பிரசாந்த் (வயது 24)
என்பது தெரியவந்தது மேலும்  அவர்கள் ஆயுதங்களுடன்  அங்கு அமர்ந்திருந்து அவ்வழியாக வருபவர்களை மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறிக்க திட்டம் தீட்டியதும் ஆகிப் உபேத் என்ற பட்டதாரி வாலிபரிடம்  செல்போன் வழிப்பறி செய்ததும் இவர்கள் என்பதும் விசாரணையில்  தெரியவந்தது, அவர்களிடம்  ஆயுதங்கள் மற்றும் செல்ஃபோன் ஆகியவற்றை  பறிமுதல் செய்து  அவர்கள் 4  பேர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )