மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், சென்னை ப்ளூ ஓசன் பர்சனல் அன் ஆலாய்டு சர்வீஸ் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், சென்னை ப்ளூ ஓசன் பர்சனல் அன் ஆலாய்டு சர்வீஸ் சார்பில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் ,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட மேலாளர் செந்தில் தலைமை வகித்தனர். வேலைவாய்ப்பு அலுவலர் வைரமுத்து வரவேற்றார். வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு குறித்து மனிதவள மேலாளர் ராம்கி விளக்கினார். முகாமில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முடிவில் 171 பேர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்றவர்கள் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் பணி நியமன ஆணையை வழங்கினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.