மாவட்ட செய்திகள்
தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட வர்கள் மாற்று கட்சியினர் இணைந்தனர்.
தேனி அல்லி நகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது இந்த விழாவில் அகில இந்திய மகளிர் அணி பொதுச் செயலாளர் லட்சுமி மாயாண்டி தலைமையில் அதிமுக, மதிமுக, ஜனதா தளம் மற்றும் பிற கட்சிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டவர்கள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலபொதுச் செயலாளருமாகிய கதிரவன் முன்னிலையில் இணைந்தனர்.
மேலும் இந்த விழாவில் கலந்துகொண்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் கூறும் பொழுது வடமாநிலங்களில் தற்போது நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல் டீசல் சிலிண்டர் ஆகியவை உயரவில்லை என்றும் தற்பொழுது வட மாநில தேர்தல் நடைபெற்று முடிந்த பின்பு தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது என்றும் பொதுத்துறை நிறுவனங்களை தற்பொழுது மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டு உள்ளது.
என்றும் தற்போது மாநிலத்தின் ஆளுகின்ற திமுக அரசானது மக்களின் நலத் திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் விபத்து ஏற்பட்டு 48 மணிநேரங்களில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொழுது மொத்த செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு அகில இந்திய அளவில் எந்த மாநில அரசும் செய்யாத நிகழ்வினை தமிழகத்தில் ஆளும் திமுக அரசு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிப்பினை ஏற்படுத்தி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.