மாவட்ட செய்திகள்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் திருச்சி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக ஏ.எஸ்.ஜி லூர்துசாமி கூட்ட அரங்கில் தீண்டாமை உறுதிமொழி ஏற்புடன் கூட்டம் தொடங்கியது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் திருச்சி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக ஏ.எஸ்.ஜி லூர்துசாமி கூட்ட அரங்கில் தீண்டாமை உறுதிமொழி ஏற்புடன் கூட்டம் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் துவங்குவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜீபுர்ராஹ்மான் ஆகியோர் மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா ஆகியோர் கையில் செங்கோல் வழங்கினர்.
திருச்சி நகராட்சியானது 1994 ஆண்டு மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதில் இருந்து மேயருக்கு செங்கோல் வழங்கப்படாமல் இருந்து வந்தது
இந்த நிலையில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜராஜேந்திரன் 4கிலோ எடைக்கொண்ட வெள்ளியிலான செங்கோல் நன்கொடையாக திருச்சி மாநகராட்சி மேயருக்கு வழங்கினார்.
இதுவரை 4வார்டு அலுவலகம் செயல்பட்டு வந்த மாநகராட்சி இனி அதிகாரிகள் பணிகளை வேகமாக செயல்படுத்தும் வகையில்
5 வார்டு அலுவலகமாக பிரிக்கப்பட்டு செயல்பட உள்ளது.
தொடர்ந்து ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் தங்களது வார்டில் குடிநீர் பிரச்சனை, சாக்கடை, கழிவறை, சாலைகள், தெருவிளக்கு உள்ளிட்ட குறைகளை தெரிவித்தனர்.
மேயர் அன்பழகன் பதிலளித்து பேசிய போது திருச்சி மாநகராட்சி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. எனவே பாதாள சாக்கடை திட்டங்கள் உட்பட அனைத்து திட்டங்கள் தொடர்பான பணிகள் நடைபெறுகிறது.
மாடு, கால்நடை வளர்ப்பவர்களிடம் மாமன்ற உறுப்பினர் சென்று விட்டில் வளர்க்க அறிவுரை கூற வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகள், உதவி ஆணையர்கள் பகுதி கண்காணிப்பாளர்கள் அனைத்து சாக்கடைகளையும் தூர்வார பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.