மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் 208 – வது கிளை தேனியில் துவக்கம்.
தேனி மாவட்டம் ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் 208 – வது கிளை தேனியில் துவக்கம். ஆலை அதிபர் என்.ஆர்.மணிவண்ணன் ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார்.
தேனி நகராட்சியின் முதல் பெண் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் குத்து விளக்கேற்றி வைத்தார்.
காட்டன் வேஷ்டி, சட்டை விற்பனையில் சிறந்து விளங்கும் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று தனது 208- வது கிளையை தேனியில் இன்று நிறுவியுள்ளது.
தேனி மதுரை சாலையில் உள்ள காந்திஜி ரோட்டில், ஆக்சிஸ் வங்கி அருகே புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளையை தேனியின் பிரபல ஆலை அதிபர் என்.ஆர்.மணிவண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேனி – அல்லிநகரம் நகராட்சியின் முதல் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் துவக்கி வைக்க, தொழிலதிபர் ராஜேந்திரன், கல்வி நிறுவனர் கலா பாண்டியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.