மாவட்ட செய்திகள்
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அமமுக மகத்தான வெற்றி பெறும் அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை பேச்சு.

தஞ்சை விளார் ரோடு காசிம் ஹால் திருமண மண்டபத்தில் தஞ்சை மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் விருத்தாசலம் வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி முன்னாள் அமைச்சரும் தலைமை நிலைய செயலாளருமான சண்முகவேலு மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் தங்கப்பன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தேவிகண்ணுக்கிணியாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைப்பெற்று வருகிறது. உண்மையான உழைப்பாளிக்கு எப்போதும் உயர்வு உண்டு. இது ஜெயலலிதா கற்றுத்தந்த பாடம். அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உண்மையாக உழைக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பேறும். அதற்கான செயலில் கட்சியினர் தீவிரமாக ஈடடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு செயலாளர் வழக்கறிஞர் ஆ.நல்லதுரை பகுதி செயலாளர்கள் மகேந்திரன், அழகு ராஜா, செந்தில் பல்லவராயர், தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவி.மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
