BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கிய நிலையில் அந்தனூர் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயை உடைத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

பின்னர் மாற்று வழியாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் சுற்றுச்சுவர் கட்டும் ஒப்பந்ததாரர் அப்பணியை தடுத்து நிறுத்தியதாகவும் குடிநீர் விநியோகம் இல்லாமல் ஒரு வார காலமாக அவதிப்படும் அப்பகுதி மக்கள் முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அந்தனூர் பேருந்து நிலையம் எதிரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த செங்கம் வட்டாட்சியர் முனுசாமி மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )