மாவட்ட செய்திகள்
வடமதுரை-பி. புதுப்பட்டியில் நகை கடன் தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக கூறி பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பாடியூர் பி.புதுப்பட்டி கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக கூறி பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் கலந்து கொள்வதற்காக தற்போது நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 8 பவுன் 100, 200 மில்லி வைத்திருப்போருக்குகெல்லாம் கடன் தள்ளுபடி இல்லாமல் நிராகரிக்கப் பட்டதாகவும் ஒரு பவுன் நகை வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி ஆகவில்லை என்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி ஆனதாகவும் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலாளர் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதாகவும் அவருடன் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
