மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம் ஒழுங்கு முறை கூடத்தில் விவசாய விற்பனை பொருட்கள் ஏலம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ,பருத்தி, மக்காச்சோளம் உட்பட விவசாய விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.இதில் மட்டை தேங்காய் ஏலத்தில் 2 விவசாயிகள்,7 வியாபாரிகள் கலந்து கொண்டனர். 61 குவின்டால் எடை கொண்ட மட்டைத் தேங்காய் ரூபாய் 57,950க்கு ஏலம் போனது. 10.65 குவிண்டால் எடை கொண்ட இரண்டாம் தர கொப்பரை தேங்காய் ரூபாய் 88,756க்கு ஏலம் போனது . இந்த ஏலத்தை கண்காணிப்பாளர் ஜோசப் நடத்தினார். இதில் கொப்பரைத் தேங்காய் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்
