மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் உணவு அருந்துவதற்கான உகந்த இடம் சான்றிதழை திண்டுக்கல் சேக்ரட் ஹார்ட் செவிலியர் பயிற்சிக் கல்லூரிக்கு அதன் நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராம பாண்டியன், துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) பழனி யசோதா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
