மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில் சட்டவிரோதமாக அமராவதி பழைய ஆற்று பாலத்தின் கஞ்சா விற்பனை.

தாராபுரத்தில் சட்டவிரோதமாக அமராவதி பழைய ஆற்று பாலத்தின் கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபரை தாராபுரம் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தலைமையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் பழைய பாலத்தின் அருகில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் சார்பு ஆய்வாளர் கருப்புசாமி தலைமையில் தாராபுரம் சிறப்பு தனிப்படை அமைத்து அமராவதி ஆற்றுப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தின் அருகில் கஞ்சாவை வாலிபர் ஒருவர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது .அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.அப்போது தாராபுரம் தென்தாரை பகுதியை சார்ந்த கந்தசாமி மகன் குருநாதன்(எ)பாலகுருநாதன் (39) என்பது தெரியவந்தது.போலீசார் குருநாதன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் அவரிடமிருந்து 1.250 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலத்தை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்த பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர். குருநாதனுக்கு இன்னும் திருமணமாகவில்லை ஏற்கனவே திருப்பூரில் தான் காதலித்த பெண்ணை பாட்டில் கொண்டு தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனால் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்த வழக்கில் மூன்று மாதம் சிறையில் இருந்து வெளிய வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
