மாவட்ட செய்திகள்
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள்.

உடுமலை நேதாஜி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டு ஆடின. இறுதிப்போட்டியில் உடுமலை வித்யாசாகர் அணியும் ஜெகதீசன் மெமேரியல் ஹாக்கி அணியும் மோதின.
இதில் ஜெகதீசன் மெமோரியல் ஹாக்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அணிக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற வித்யாசாகர் அணிக்கு பரிசுகள்வழங்கப்பட்டன. உடுமலை நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்க, உடுமலை ஹாக்கி அசோசியேசன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்திப் பேசினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
