BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மகளிர் மேம்பாட்டிற்காக எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் மோட்டார் சைக்கிளில் 6000கிமீ விழிப்புணர்வு பிரச்சாரபயணம்.

மகளிர் மேம்பாட்டிற்காக எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் மோட்டார் சைக்கிளில் 6000கிமீ விழிப்புணர்வு பிரச்சாரபயணம்

இதுவரை பைக்கில் 20 கிலோமீட்டர் மட்டுமே பயணம் செய்த நாங்கள் 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து பெருமையாக உள்ளது என எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் பெருமிதம்.

எல்லைப் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள 36 வீராங்கனைகள் சேர்ந்து டெல்லி இந்தியா கேட் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 6 ஆயிரம் கி.மீ. தூரம் மகளிர் மேம்பாடு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மார்ச் 8-ம் தேதிமகளிர் தினத்தில் டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் இப்பயணம் தொடங்கியது.

அங்கிருந்து பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா வழியாக இருசக்கர வாகனத்தில் 36 வீராங்கனைகளும் தமிழக எல்லையான ஓசூர் வழியாக தமிழகம் வந்தடைந்தனர் அதைத்தொடர்ந்து கிருஷணகிரி, தருமபுரி, சேலம் வழியாக கன்னியாகுமரி சென்றடைந்தனர்

இதன் நிறைவு விழா இன்று திருப்பெரும்புதூரில் உள்ள வல்லம் வடகால் பகுதியிலுள்ள
ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலையில் நிறைவு விழா நடைபெற்றது

இந்திய பாதுகாப்புப் படையில் பெண் வீரர்கள் பங்கேற்கும் முதல் விழிப்புணர்வு பயணம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் உலகம் முழுவதும் இந்த பாதுகாப்பு படை குழுவைச் சேர்ந்த பெண்கள் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்வமுடன் உள்ளதாக கூறுகின்றனர்

இந்த பயணக் குழுவினரை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் இயக்குனர் கோவிந்தராஜன் வெகுவாக பாராட்டினார்.

மேலும் நாட்டிற்காகவும் ராணுவத்திற்கும் ராயல் என்பீல்டு மோட்டார் நிறுவனம் 70 ஆண்டு காலம் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்

மேலும் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் உடன் இணைந்து செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மகளிர் மேம்பாட்டிற்காக எல்லைப்படை வீராங்கனைகள் நாடுமுழுவதும் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது பெருமைக்கு உரியது என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )