BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 517 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 517 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு தாலிக்கு தங்ககாசு வழங்கினார் .

முன்னதாக கடமலை மயிலை ஒன்றியத்தைச் சேர்ந்த 161 பெண்களுக்கும், கம்பம் ஒன்றியத்தைச் சேர்ந்த 130 பெண்களுக்கும், ஆண்டிபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த 226 பெண்களுக்கும் ,ஆகமொத்தம் 517 பேர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பிளஸ் 2 முடித்து இருந்தால் ரூபாய் 25000 வீதமும் , பட்ட படிப்பு முடித்திருந்தால் ரூபாய் 50 ஆயிரமும் தமிழக அரசு அவர்களது வங்கி கணக்கில் வர வைத்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )