BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய விசாரணை குழு அமைக்க வேண்டும் – பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்

திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் யுஜிசி சட்டத்தின்படி எதுவும் நடப்பதில்லை. அங்கு வேலை செய்பவர்கள் தொடர்ந்து பத்து வருடமாக சுழற்சி முறையில் இருந்து வருகின்றனர். யுஜிசி சட்டத்தின்படி மூன்று வருடத்திற்கு மேல் ஒருவர் அந்தப் பதவியில் இருக்க கூடாது என்பது விதி. ஆனால், அங்கு வேலை செய்பவர்கள் தவறுகளை வெளி வராத வண்ணம் தாங்களே மாறி மாறி வேலை செய்து வருகின்றனர் தற்போது இருக்கும் துணைவேந்தர் ஏற்கனவே பணியாற்றி வந்த துணைவேந்தர் மணிசங்கரின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறார். தன்னிச்சையாக எந்த செயல்பாடும் அவர் செய்வதில்லை. இதற்கு மேல் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் அதிகாரி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வரக்கூடிய அனைத்து திட்டங்களையும் தடுக்க வகையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்சி/எஸ்டி பிரிவினை செயல்படாத வண்ணம் வைத்துள்ளனர். தற்போது இருக்கும் அதிகாரியின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் மீண்டும் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். எஸ்சி /எஸ்டி பிரிவினர் மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கட்டணமாக வாங்க கூடாது என மாநில அரசின் விதி உள்ளது. ஆனால் பணம் வசூல் செய்து கொண்டு மீண்டும் திருப்பி கொடுப்பது கிடையாது. யுஜிசி மூலமாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளில் நிறைய முறைகேடுகள் செய்து வருகின்றனர்.
உடனடியாக மத்திய, மாநில அரசுகள் விஜிலன்ஸ் அல்லது சிபிஐ கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )