மாவட்ட செய்திகள்
பிரசித்தி பெற்ற அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக இன்று அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா வரும் நிலையில் பூச்செரிதல் நிகழ்ச்சி.

பிரசித்தி பெற்ற அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக இன்று அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா வரும் நிலையில் பூச்செரிதல் நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பெண்கள் பூக்கூடைகளில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூ வழங்கும் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அம்மையநாயக்கனூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 2-ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் கொரோனா தடை காலத்தால் கடந்த 3-ஆண்டு காலமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு கடந்த 29-தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா கடந்த 5-நாட்களாக கேடயவாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம் என எழுந்தருளி தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பிள்ளைமார்கள் மண்டகப்படியை முன்னிட்டு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து பூ-க்களை கூடைகளில் கொண்டு புகழ்பெற்ற நரசிங்க பெருமாள் திருக்கோவிலிருந்து கடைவீதி செக்கடி தெரு மாரியம்மன் கோவில் வீதி வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை வழங்கும் பூச்செரிகழ் நிகழ்ச்சி நடைபெற்றது .


இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சிக்கு பூக்களை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அம்மன் இன்று இரவு அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
