மாவட்ட செய்திகள்
ராஜகுரு அருள்பாலிக்கும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிவில் குருபெயர்ச்சி விழா வருகிற 14-ஆம் தேதி நடக்கிறது.இதற்கான பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ராஜகுரு அருள்பாலிக்கும் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிவில் குருபெயர்ச்சி விழா வருகிற 14-ஆம் தேதி நடக்கிறது.இதற்கான பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறைஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது குருபெயர்ச்சி விழா திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு குருபகவான் வருகிற 14-ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிகாலை 4.16 பிரவேசிக்கிறார்.இதை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடக்கிறது.

குரு பெயர்ச்சியின் போது பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏக தின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.மேலும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை,30 ந் தேதி சனிக்கிழமை ஆகிய இர்ணடு நாட்கள் பரிகார ஹோமம் நடக்கிறது.

நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனை க்கு ரூபாய் 300,ஹோமத்திற்கு ரூபாய் 500 மணியார்டர் அல்லது வரைவோலை தங்கள் பெயர் ராசி நட்சத்திரம் ஆகிய விவரங்கள் மற்றும் சரியான முகவரியுடன் கூடிய விவரங்களுடன் கோவில் நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்காலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது .

குரு பெயர்ச்சியையொட்டி கோவில் பக்தர்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
