மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் சொத்து வரி துரோகமானது என்று தமிழ்த் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, தமிழ் தேச பேரியக்க தலைவர் மணியரசன் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணியரசன், தமிழ்நாட்டு தொழில் வணிகம் வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தமிழக அரசு வெளிமாநில முதலாளிகளை அதிகமாக சேர்ப்பதை கண்டித்து மே மாதம் கோவையில் இந்திய அரசு அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்றும்,

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து குமரி முனையிலிருந்து கும்மிடிபூண்டி வரை உழவர் அமைப்புகள் கட்சி அமைப்புகள் பொதுமக்கள் அனைத்தையும் சேர்த்து பெரும் எழுச்சி போராட்டத்தை நடத்த தமிழக முதல்வர் முயற்சி எடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரிக் காப்பு நாள் என்று அறிவித்து பெரும் எழுச்சியை காட்ட வேண்டும் என்றும்,


தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் சொத்துவரி அறிவிப்பு மோசமானது துரோகமானது என்றும் தெரிவித்தார் இக்கூட்டத்தில் தமிழ் தேச பேரியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
