BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி கோஷ்டி தகராறு உடன் முடிந்த காங்கிரஸார் கண்டன போராட்டம் – ஒருவரை ஒருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுமார் 8ரூபாய்க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் இருக்கு ரூபாய் 50விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர்வை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தால் அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் குறுக்கு தெரு பகுதியில் இன்று காலை காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் கியாஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை போட்டு, அருகில் விறகு அடுப்பு பற்றவைத்து கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு உடனடியாக கியாஸ் விலையை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உன்னால் பெயர் சுஜாதா, முன்னால் மாமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், வில்ஸ்.முத்துக்குமார், முரளி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் ஜவகர் கோஷ்டியினருக்கும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சரவணன் கோஷ்டியினருக்கும் தகராறு ஏற்பட்டது.

 


அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட தலைவர் ஜவகர் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என எப்படி தெரிவிக்கலாம் என வழக்கறிஞர் சரவணன் கோஷ்டியினர் ஒருவர் தாக்க முற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )