BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோடை வெயிலில் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்.

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள்அதிக அளவில் குவிந்தனர் கோடை வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை உள்ளது இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சலிங்க அருவி திருமூர்த்தி அணை நீச்சல் குளம் வண்ண மீன் காட்சியகம் ஆகியவை உள்ளன அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகளும் பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்வது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரோனோ தொற்று காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இடையில் சிலமாதங்கள் திறக்கப்பட்டு மீண்டும் கோரானா மூன்றாவது அறை பரவ தொடங்கியதால் மூடப்பட்டது.


இதனால் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல வனத்துறையின் அனுமதி அளித்துள்ளனர் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் திருமூர்த்தி மலைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.


அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் கோடை வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்கின்றனர் அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென அதிக அளவில் மழை பெய்யும் போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வழக்கம் தற்போது கோடைகாலம் என்பதால் மிதமான அளவு தண்ணீர் வருகிறது நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )