மாவட்ட செய்திகள்
மரக்கன்றுகளை பாதுகாக்கும் மூங்கில் தடுப்புகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் தீவிரம்.
பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டாலும் கால்நடைகளால் மரங்கள் சேதப்படுத்தப் படுவதால் குறைந்த அளவு மரங்களே முழுமையாக வளர்கின்றன எனவே மரக்கன்றுகளை குறிப்பிட்ட மாதங்கள் பராமரிக்க மூங்கில் தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
உடுமலையில் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையிலான மூங்கில் தடுப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் இந்தப் பணியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூங்கில் தொழிலில் மூங்கிலை கொண்டு கூடை பின்னும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
வீட்டின் ஜன்னல்களில் அலங்கார ஸ்கிரீன் மற்றும் மரம் பந்தல் கூண்டுஏணி என பல வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தாலும் பலர் மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி செல்ல விரும்புகின்றனர்.
மத்திய அரசு மூங்கில் வளர்ப்பு மற்றும் அதன் தொடர்பான பல்வேறு தொழில்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் கடந்த 2018 ல் மரங்களின் பட்டியலில் இருந்து மூங்கிலை நீக்கியது இதனால் விவசாயிகள் பலர் மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மானாவாரி நிலங்கள் தரிசு நிலங்களில் மூங்கிலை உற்பத்தி செய்து வருகின்றனர் அதன்படி சில தினங்களாக மரங்களை பாதுகாக்கும் வகையிலான மூங்கில் தடுப்புகள் அதிகப்படியாக தயாரிக்கப்பட்டு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதுகுறித்து மூங்கில் தயாரிப்பு தொழிலாளர்கள் கூறியதாவது
பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகள் சார்பில் மரம் வளர்ப்பதற்குஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சாலையோரங்களிலும் பள்ளி வளாகங்களிலும் அரசு அலுவலகங்களிலும் மரக்கன்றுகள் நடவுசெய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மரங்களை நட்டாலும் அதை பாதுகாப்பதற்கும் மூங்கில் தடுப்பு பயன்படுத்தப்படுகிறது.
அவ்வப்போது சில தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க மூங்கில் தடுப்புகள் தயாரிக்க மொத்தமாகவும் ஆர்டர் கிடைக்கும் என கூறினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.