மாவட்ட செய்திகள்
11 சமஸ்கிருத ஸ்லோகங்களை 5 நிமிடத்தில் கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள உடுமலை தனியார் பள்ளி மாணவி.
உடுமலை ஸ்ரீ வி.ஜி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சஹானா இவர் ஐந்து நிமிடத்தில் 11 சமஸ்கிருத ஸ்லோகங்களை கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கணபதி பிரார்த்தனா நாராயண உபநிஷத் வேதம் விஷ்ணு சகஸ்ரநாமம் கணபதி மந்திரம் ஸ்லோகம் சரஸ்வதி மந்திரம் காயத்ரி ஸ்லோகம் காயத்ரி மந்திரம் அசத்தோமா பகவத் கீதை குரு ஸ்லோகம் உலக சாந்தி முதலியவற்றில் சிறப்பு பெற்ற இவருக்கு இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிய குரு குஞ்சிதபாதம் அதற்கு உறுதுணையாக இருந்தவர் பேராசிரியர் நாராயணன் ஆகியோர் சஹானா தனது ஏழாவது வயதில் கர்நாடக சங்கீதம் லலிதாவிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் மேலும் இவர் பாலவிகாஸ் ராஜேஸ்வரியிடமும் திருமுறை செல்வி உமா நந்தினி பாலகிருஷ்ணனிடம் கற்று வருகிறார் இவர் இசை பேச்சு சிலம்பம் கராத்தே யோகா ஓவியம் கட்டுரை சிலம்பம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்று மாவட்டம் மற்றும் அளவில் பள்ளி அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் இவர் திருமுறை ஓதுதல் மற்றும் பேச்சு லண்டன் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார் மேலும் அறிவியல் வினாடி வினா அறிவியல் குழு கின்னஸ் சாதனையில் இருமுறை இடம் பிடித்துள்ளார் யோக உலகசாதனையிலும் இடம் பெற்றுள்ளார்.
பாலவிகாஸில் மாவட்ட அளவில் பேச்சு மற்றும் பாடல் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளார் உடுமலை கிளை நூலகம் எண் 2 சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். மேலும் ஆன்மிக பேரவை மற்றும் அரசு நடத்தும் பள்ளி கலைத்திருவிழா போன்றவற்றில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார் இவர் சைவ சித்தாந்த வகுப்பிலும் பயின்று வருகிறார் இவர் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கும் அனைத்து குருமார்களின் பங்கும் அளப்பரியது இவர் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தற்காக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இவரது பெற்றோர் ஆனந்தன் வித்யா வரலட்சுமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.