BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே மனைவியை தரக்குறைவாக பேசியவரை தட்டிக் கேட்ட விவசாயியை பீர் பாட்டிலால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தஞ்சையை அடுத்த திருவாய்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (52) விவசாயி‌. இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர் தரக்குறைவாக பேசி திட்டியுள்ளார். இதுகுறித்து மாணிக்கவாசகம் அவரை தட்டிக் கேட்டார்.

இதில் மணிகண்டன் ஆத்திரம் அடைந்து பீர் பாட்டிலால் மாணிக்கவாசகத்தை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தாலுகா போலீசில் கொடுத்த மாணிக்கவாசகம் புகார் கொடுத்தார். இதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )