BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையத்தில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து ரூ.15 ஆயிரம் மதிப்பு தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்.

 

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையத்தில் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து ரூ.15 ஆயிரம் மதிப்பு தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு செந்தமிழ் நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் வேலாயுதம் (49). இவர் கடந்த 1ம் தேதி குடும்பத்தினருடன் பழனி, திருச்செந்தூர் கோயிலுக்கு வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேலாயுதம் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பு கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )