BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை இன்னர்வீல் சங்கம் சார்பில் 170 தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சை இன்னர்வீல் சங்கம் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளர்கள் 170 பேருக்கு சேலை, ஸ்வீட் பாக்ஸ், யோகாசனம் குறித்த புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் தலைவி சங்கீதா திருவேங்கடம் தலைமை வகித்தார். செயலாளர் பாரதி கோவிந்தராஜ் பொருளாளர் பூங்கொடி முரளி, PDC உஷா நந்தினி விசுவநாதன், எடிட்டர் ரேகா குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்துகொண்டு 170 பெண் தூய்மைப் பணியாளர் களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி அதிகாரி நமசிவாயம், இன்னர் வீல் சங்க உறுப்பினர்கள் செண்பகா மோகன், இளவரசி, சண்முகவடிவு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )