மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் , டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியும் மோடி அரசு உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பெட்ரோல் , டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வால் காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் கேஸ் வைத்து எடப்பாடி பேருந்து நிலையத்தை சுற்றி வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.