மாவட்ட செய்திகள்
இலங்கை போல தமிழகத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது இதனால் தமிழகத்திலும் மக்கள் வீதிகளில் வந்து போராடும் சூழல் ஏற்படும் என திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு.

சொத்துவரி மற்றும் குப்பை வரி உயர்வை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் , பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
அப்போது பேசிய அவர் இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சி நடைபெறுவது போல தமிழகத்தில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகவும் , இதன் காரணமாகவும் தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் அவல ஆட்சியின் காரணமாக விரைவில் இலங்கையில் உள்ளது போல பொருளாதார சூழல் ஏற்பட்டு மக்கள் வீதிகளில் வந்து போராடும் சூழல் ஏற்படும் எனவும் பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், எம்.எஸ்.எம் ஆனந்தன் , மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.