மாவட்ட செய்திகள்
புள்ளிலைன் ஊராட்சியில் காசநோய் ஒழிப்பு விழிப்பு உணர்வு, உறுதிமொழி.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் (Nகூஉக) விழிப்புணர்வு வாரம் பற்றிய செயல்பாடு ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மாதவன், 6வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி மாணிக்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சங்கீதா, திட்டச் செவிலியர் தனலட்சுமி, கிராமச் செவிலியர் ஹேமலதா, ம.தே.ம.திட்ட தன்னார்வலர் யாமினி ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு அளித்து காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
