BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருவையாறில் புற வழிச்சாலை அமைத்திட, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கு ஊதி, தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு நூதன போராட்டம்.

திருவையாறில் புற வழிச்சாலை அமைத்திட, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கு ஊதி, தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு நூதன போராட்டம்.

பேட்டி திரு. சுகுமாரன்- விவசாயி – கீழத்திருப்பந்துருத்தி தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாத நிலை ஏற்படுவதை தடுத்திட 129 கோடி ரூபாய் நிதியில், 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைத்திட முடிவு செய்து, வருவாய்துறையினர் கீழத்திருப்பந்துருத்தி, மணக்கரம்பை, கண்டியூர், உள்ளிட்ட பகுதிகளில் 150 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்திட முடிவு செய்துள்ள நிலையில்,

மணக்கரம்பை பகுதியில் இன்று ஒன்று திரண்ட விவசாயிகள் தங்களது வாழைத்தோப்பில், சங்கு ஊதி, தூக்குக் கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், திருவையாறில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினாலே போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும் என்றவர்கள் விளைநிலங்களை தரமாட்டோம் என்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )