BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவு.

திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார் . ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சித்திட் டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுட னான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார் . செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி ஆய்வு மேற் கொண்டார் . அப்போது ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களை கேட்டறிந்தார் . ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகளின் நிலை குறித்தும் விரிவாக கேட்டார் . இந்து சமய அறநிலையத்துறையில் கும்பாபிஷேகத் துக்கு தயாரான கோவில்கள் , ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலம் , போக்குவரத்து துறை திட் டங்கள் , ஆவின் திட்டம் , சுகாதாரத்துறை திட்டங்களை அமைச்சர் ஆய்வு செய்தார் . பின்னலாடை ஆய்வு மையம் பின்னர் கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசி யதாவது : அவினாசிலிங்கம்பாளையம் , உடுமலை பகுதிகளில்இ.எஸ்.ஐ. மருந்தகம் திறக்க வேண்டும் .

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் , மடத்துக்குளம் , உடு மலை , பல்லடம் , காங்கயம் , அவினாசி , ஊத்துக்குளி அரசு மருத்துவமனைகளில் ரூ .59 கோடியே 49 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகளை விரைவில் தொடங்குவ தற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் . பல் லடத்தில் கோழி ஆராய்ச்சி நிலையம் , விதைச்சான்று அலுவலகங்கள் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் . திருப்பூர் பின்னலாடை ஆய்வு மையம் அமைக்க தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது . சிட்ரா மற்றும் கோவை யில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேம் பாட்டு கல்லூரியிடம் இருந்து திட்ட மதிப்பீடு அறிக் கையை பெற்று பின்னலாடை ஆய்வு மையம் விரை வில் அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண் டும் . நஞ்சராயன் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முன்மொழிவை வனத்துறை விரைந்து செயல்படுத்த வேண்டும் . புதிய ரேஷன் கடைகள் சங்கராண்டம்பாளையத்தில் பால் குளிரூட்டும் மையம் அமைக்க ஆவின் அதிகாரிகள் உரிய முயற்சி மேற் கொள்ள வேண்டும் . மாவட்டம் முழுவதும் 1,000 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து கூடுதல் கடைகள் உருவாக்க வேண்டும் . அவ்வாறு 90 கடைகள் புதிதாக தொடங்க வேண்டும் .

விற்பனை கருவி வழங்குவதில் உள்ள தாமதத்தை தவிர்த்து புதிய கடைகளை விரைந்து தொடங்க வேண்டும் . கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு கிராமப்புற பகுதிகளுக்கு சென்ற டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கப் படாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார் கள் . ஏற்கனவே இயக்கப்பட்ட கிராமப்புற டவுன் பஸ் களை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொள்ள வேண் டும் . விவசாயிகளின் கோரிக்கைப்படி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைக்கும் பரிந்துரையை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது . மாற்று வழிக்கான ஏற்பாட்டை ஆராய வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார் . இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி ) ராணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )