BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒடுகத்தூர் அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி நிரம்பி சாலையில் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள் வேதனை.

ஒடுகத்தூர் அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி நிரம்பி சாலையில் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த மகமதுபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக ஊராட்சி சார்பில் தெரு விளக்கு, கால்வாய் தூர் வாருதல் போன்ற பல்வேறு பணிகள் செய்து வருகின்றது.
அதேபோல், பொதுமக்களின் தேவைக்காக அப்பகுதியில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைப் நீர் தேக்க தொட்டி அமைத்து நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக பணியாளர் ஒருவரை நியமித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி நிரப்பப்படுகிறது.
ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட பணியாளர் சரியான முறையில் பணி செய்யாததால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி நிரம்பி குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
தற்போது, கோடை காலம் தொடங்கிவிட்டதால் பல்வேறு பகுதிகளில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கோ சரிவர பணி செய்யாததால் குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இது போன்ற செயல் ஒருமுறை மட்டுமின்றி நாள்தோறும் குடிநீர் வீணாகிறது. இவ்வாறு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இனிவரும் காலங்களில் இது போன்று தவறுகள் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )