மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே களப்பாளங்குளத்தில் மஹாசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை உள்ள களப்பாளங்குளத்தில் உள்ள மஹாசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கழுகாசலமூர்த்தி கோயில் குமார தெப்பத்திலிருந்து தீர்த்தம் எடுத்தும், நடுவூரணி பிள்ளையார் கோவிலிலிருந்து பால்குடங்கள் கிளம்பி, பழங்கோட்டை வழியாக களப்பாளங்குளத்திற்கு 7கி.மீ தூரம் பக்தர்கள் பால் குடங்களும், தீர்த்தக் குடங்களும் எடுத்து நடந்தே சென்று மஹாசக்தி காளியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதணைகளும் 1மணிக்கு அன்னதானமும் அதனைதொடர்ந்து இரவு 12 மணிக்கு சாமக்கொடை பூஜையும் நடைபெற்றது.இதில், ஊர் நாட்டாமை மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.