மாவட்ட செய்திகள்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வைரல் புன்னகை புகைப்பட மூதாட்டியை நாகர்கோவிலில் பிரச்சாரத்தின்போது சந்தித்து கட்டிப்பிடித்து அரவணைத்து பேசி மகிழ்ந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எம்பி.விஜய் வசந்த்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் தேர்தல் மற்றும் நகராட்சி,பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கிறது,இதற்காக அரசியல் கட்சியினர் பம்பரம் போல் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,அதேபோன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்,விஜய் வசந்த் தனது கட்சியை வேட்பாளர்களை ஆதரித்து திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் திறந்த வாகனத்தில் முழுநேர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்,
நேற்று கழுங்கடி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்.அனிதாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தமிழக அரசின் விளம்பர புன்னகை மூதாட்டி அப்பகுதியில் இருப்பதை அறிந்து உடனே அங்கு சென்று மூதாட்டியிடம் தான் யார் என்று தெரிகிறதா என கேட்டு ஆச்சரியப்படுத்தினார்,
மேலும் மூதாட்டியிடம் கட்டி அணைத்து நீங்கள் பிரபலமானவர்கள் முதல்வர் ஸ்டாலினிடமே பேசியவர் என மூதாட்டியிடம் பேசி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார், இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்,மேலும் பிரச்சாரத்தின் போது மூதாட்டியை பார்த்து வெகுநேரம் அமர்ந்து பேசியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..