BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சமூக ஊடகங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள்” குறித்து விழிப்புணர்வு முகாம்.

சமூக ஊடகங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள்” குறித்து விழிப்புணர்வு முகாம்.

• நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி) சமூக பணி துறையும் , கோட்டார் சமூக சேவை சங்கமும் இணைந்து “சமுக ஊடகங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்கள்” குறித்து நாகர்கோவில், மேலராமன்புதூரில் உள்ள ஆலய வளாகத்தில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
• இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தவர்
கோட்டார் சமூக சேவை சங்கம் மற்றும் திருச்சிலுவை கல்லூரியின் சமூக பணி துறை மாணவி அ.சகாய ராணி
• விழிப்புணர்வு முகாமுக்கு வருகை புரிந்த ‌அனைவரையும் கோட்டார் சமூக சேவை சங்கம் மற்றும் திருச்சிலுவை கல்லூரியின் சமூக பணி துறை மாணவி லிஸ்னி வரவேற்றார்.
• இந்நிகழ்வில் மேலராமன்புதூர் பங்கு தந்தை கிறிஸ்து ராஜ் அவர்கள் தலைவர் உரை ஆற்றினார்.அதை தொடர்ந்து அவ்வூர் தலைவர் ஐ.ஜே.மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.


• இந்நிகழ்வில் திருச்சிலுவை கல்லூரியின் நோடல் ஒருங்கிணைப்பாளர்திருமதி.கேத்தரின் மேரி அவர்கள்” சமூக ஊடகங்கள் என்றால் என்ன? அதன் நன்மை மற்றும் தீமைகள் குறித்தும் ,சைல்டுலைன் எவ்வாறு செயல்படுகிறது,சைல்டுலைன் உதவி எண் குறித்தும் மற்றும்
• அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டுக்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 என்று பல உதவி எண்கள் குறித்தும் தெளிவாக விவரித்தார்கள்.இதில் அவ்வூர் மக்களின் சந்தேகங்களும் தீர்த்து வைக்க பட்டது.கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கோட்டார் சமூக சேவை சங்க உறுப்பினர் அபிலா எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக கோட்டார் சமூக சேவை சங்கம் மற்றும் திருச்சிலுவை கல்லூரியின் சமூக பணி துறை மாணவி இந்து யமுனா நன்றியுரை ஆற்றினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )