மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு சுந்தரேஸ்வரருக்கு திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.


16-ம் தேதி வரை தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி, திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.திருவிழாவில் முக்கிய நிகழ்வான 9-ஆம் நாள் திருவிழாவான மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வும் 10-ம் திருவிழாவான வரும் 15-ம் தேதி நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற இருக்கிறது.


11-ஆம் திருநாளான வரும் 16-ம் தேதி மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
